News September 9, 2025
உடல் எடை குறைய இந்த மூலிகை தேநீர் தான் பெஸ்ட்!

எடை குறையவும், தேவையற்ற சதையைக் கரையவும் பெருஞ்சீரக லெமன் டீ தான் பெஸ்ட் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
*இஞ்சியை தோல் சீவி பாதியாக தட்டி எடுத்துக் கொள்ளவும். பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும். வெந்நீரில் இந்த இரண்டையும் சேர்ந்து நன்கு கொதித்த பிறகு, இறக்கி வடிகட்டவும். இதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்தால், பெருஞ்சீரக தேநீர் ரெடி. SHARE IT.
Similar News
News September 9, 2025
விஜயகாந்த் வீட்டில் பெரும் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

விஜயகாந்தின் மூத்த சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரின் இறுதிச் சடங்கு சொந்த ஊரான மதுரையில் நாளை நடைபெறும் என்று பிரேமலதா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News September 9, 2025
தமிழ் சினிமாவும் ₹1000 கோடி வசூலும்..SK சொன்ன பாய்ண்ட்

தமிழ் சினிமாவுக்கு ₹1,000 கோடி வசூல் கனவாக இருக்கும் நிலையில், அது குறித்து SK சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழில் பான் இந்தியாவுக்கான சரியான ஸ்கிரிப்ட் இல்லை என்றும், மும்பை, பெங்களூரு போல டிக்கெட் விலை இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஆனால், டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என தான் கூறவில்லை என்று விளக்கமளித்தவர் ஹிந்தி மார்க்கெட்டை பிடிப்பது அவசியம் என சுட்டிக்காட்டினார்.
News September 9, 2025
தமிழகம் முழுவதும் உதயநிதி சுற்றுப்பயணம்

DCM உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் கட்சி ரீதியிலான சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. தொகுதி வாரியாக பயணம் செல்லும் அவர், கட்சி நிர்வாகிகளுடன் உரையாடவுள்ளார். அத்துடன், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை சிறப்பாக செயல்படுத்திய தொண்டர்களையும் கெளரவிக்க இருக்கிறார். இதற்கான பயணத் திட்டம் தயாராகி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.