News October 12, 2025
சளி, இருமலை போக்க இந்த மூலிகை தேநீர்தான் பெஸ்ட்!

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வையுங்கள். பின் கற்பூரவள்ளி இலைகளை சேருங்கள். அதில் தோல் நீக்கிய இஞ்சி (சிறு)துண்டுகள், மிளகு மற்றும் ஏலக்காயை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதை வடிகட்டிக்கொள்ளவும். மிதமான சூட்டில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணமாகும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News March 14, 2026
மதுரை: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 14, 2026
மார்ச் 16-ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, மார்ச் 16-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இதுவரை தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை. சீட் பேரத்தில் இழுபறி நீடிப்பதாலேயே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பாஜகவுக்கு EPS பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News March 14, 2026
மனித உடலில் தங்கம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

நம் ஒவ்வொருவரது உடலிலும் தங்கம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது கேட்பதற்கு விசித்திரமாக தோன்றலாம்; ஆனால் அது உண்மையே. 70 கிலோ எடையுள்ள ஒரு மனித உடலில் சுமார் 0.2 மி.கி தங்கம் உள்ளது. இது ஏறக்குறைய 5 லிட்டர் ரத்தத்தில் மிக சிறிய அளவில் கரைந்துள்ளதால், இதனை தனியாக பிரிக்க முடியாது. இது மூட்டு ஆரோக்கியத்திற்கும், உடலில் ஏற்படும் மின் சமிக்ஞைகளுக்கு பெரும் துணைபுரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


