News October 7, 2025
அஜீரண கோளாறுக்கு இந்த மூலிகை தேநீர் தான் பெஸ்ட்!

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு & செரிமான பிரச்னைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற அன்னாசிப்பூ தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அன்னாசிப்பூ, சுக்கு, மிளகு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அன்னாசிப்பூ தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.
Similar News
News October 7, 2025
ராமதாஸை நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக ராமதாஸின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்துள்ளார். தற்போது ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ரஜினி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 7, 2025
இந்திய அணியின் தோல்விக்கு இது காரணமாகலாம்: கைஃப்

ரோஹித் சர்மாவை ODI கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, கில்லிடம் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கில் இதற்கு ஒப்புக்கொண்டதாக Ex இந்திய வீரர் முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார். இது அணியின் தோல்விக்கு வழிவகுக்கும் என்ற அவர், 2027 WC-க்கு பின் கில்லுக்கு இவ்வாய்ப்பினை வழங்கியிருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
News October 7, 2025
கார்த்தி சிதம்பரம் ஹாஸ்பிடலில் அனுமதி!

சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம் திடீர் உடல்நல குறைவால், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நலம் குறித்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கெனவே, ராமதாஸ், வைகோ ஆகியோரும் அப்போலோவில் அட்மிட் ஆகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.