News December 20, 2024
இந்த Fasting எடையை குறைக்கும்; ஆனால்… எச்சரிக்கை!

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடுவது, பிற்பகல், இரவு மட்டும் உணவு எடுத்துக்கொள்வது.. இப்படி எந்தவிதமான Intermittent Fasting முறையில் இருந்தாலும் உடல் எடை குறையும். ஆனால் அது முடி உதிர்வை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் Westlake ஆய்வாளர்கள். எலியை வைத்து ஆய்வு செய்ததில் இதனை கண்டறிந்துள்ளனர். Fasting, முடியின் ஸ்டெம் செல்களை (HFSCs) காலி செய்துவிடுகிறதாம். fasting-லும் கொஞ்சம் கவனமா இருங்க.
Similar News
News September 7, 2025
சந்திர கிரகணத்தில் தானம் செய்தால் இவ்ளோ நல்லதா!

கிரகணத்துக்கு பிறகு வெள்ளை பொருட்களை தானம் செய்தால் பணம் வந்துசேரும் என்ற ஐதீகம் உள்ளது.
*வெள்ளியை தானம் செய்வதால், கூர்மையான அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் & செழிப்பு என சகல செல்வங்களும் கிடைக்கும்.
*அரிசி சந்திரனுடன் தொடர்புடையதால், அரிசியை தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
*பால் தானம் செய்வதால் அன்னை லட்சுமி மகிழ்ச்சியடைவார். இதனால் புகழ், மன அமைதி கிடைக்கும். SHARE IT.
News September 7, 2025
புடின் கீவ்வுக்கு வரலாம்: ஜெலன்ஸ்கி அழைப்பு

புடின் விடுத்த <<17626558>>அழைப்பை நிராகரித்த <<>>ஜெலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு ரஷ்ய அதிபர் வரலாம் என பதில் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், செப்டம்பரின் முதல் 5 நாள்களில் மட்டும் 1,300 டிரோன்கள், 900 குண்டுகள் மற்றும் 50 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஜெலன்ஸ்கி பட்டியலிட்டுள்ளார். இதன்மூலம், பேச்சுவார்த்தை நடக்க தற்போது வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
News September 7, 2025
அதிமுக பொறுப்பில் இருந்து Ex MP சத்யபாமா நீக்கம்

அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து Ex MP சத்யபாமாவை நீக்கி, EPS அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைப்பு விவகாரத்தில் ஆரம்பம் முதலே கே.ஏ.செங்கோட்டையனுடன் இருந்து வந்த சத்யபாமா, இன்று காலை, தான் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், EPS சற்றுமுன் அவரை நீக்கியுள்ளார்.