News August 14, 2025
Gpay, Phonepeல் இனி இந்த வசதி கிடையாது!

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்கத் தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியில் REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது. வட போச்சே!
Similar News
News August 14, 2025
உரிமைத் தொகை.. 12 லட்சம் பேரின் நிலை என்ன?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது விண்ணப்பங்களின் நிலையை பரிசீலிப்பதில் ஏன் தாமதம் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 2 நாள்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும், ஆனால் 1 மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஏமாற்றுவேலை என்றும் காட்டமாக கூறியுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
News August 14, 2025
ஆபரேஷன் சிந்தூர்: 9 பேருக்கு ‘வீர் சக்ரா’ விருது

79-வது சுதந்திர தினத்தையொட்டி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்த விமானப்படை வீரர்களுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் கேப்டன்கள் ரன்ஜீத் சிங் சித்து, மணீஷ், அனிமேஷ் பட்னி, குணால் கல்ரா, விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்குவாட்ரன் லீடர்கள் சர்தக், சித்தாந்த் சிங், ரிஸ்வான் மற்றும் பிளைட் லெப்டினன்ட் ஆர்ஷ்வீர் சிங் தாகூர் ஆகியோர் இவ்விருதை பெறவுள்ளனர்.
News August 14, 2025
பிரிவினையின் துயரங்களை மறக்க கூடாது: ஜனாதிபதி

சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுடன் உரையாற்றியுள்ளார். நாட்டின் விடுதலைக்கு போராடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், நாட்டின் பிரிவினையின் போது ஏற்பட்ட கொடூரங்களை ஒருபோதும் மறக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நல்ல நிர்வாகத்தை அடைய நாடு நெடிய தூரம் பயணித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.