News October 8, 2025
இந்த டயட் 40,000 உயிரிழப்புகளை தடுத்திடும்

தாவரங்கள் நிறைந்த Planetary ஹெல்த் டயட்டினால் தினமும் 40,000 உயிரிழப்புகளை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்கள், காய்கறிகள், பருப்புகள், நட்ஸ், சிறிதளவு இறைச்சி அடங்கிய இந்த டயட் பின்பற்றினால் சராசரி வாழ்நாளுக்கு முன்பாகவே நிகழும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என EAT- லான்செட் கமிஷனின் ஆய்வு கூறுகிறது. இந்த டயட்டினால் மாரடைப்பு, இதய நோய், கேன்சர் உள்ளிட்ட நோய்களின் அபாயமும் குறையுமாம்.
Similar News
News October 8, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி இதுவா?

ராமதாஸுடன் EPS கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் பரவி வருகிறது. ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை நேரில் சந்தித்து EPS உடல்நலன் குறித்து விசாரித்த நிலையில், இருவரும் தனிமையில் 30 நிமிடங்கள் கூட்டணி பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. தனிமையில் பேசியதை உறுதிப்படுத்தியுள்ள அருள் MLA, இருவரும் என்ன பேசினார்கள் என்பது தனக்கு தெரியாது என்று FB-ல் பதிவிட்டுள்ளார்.
News October 8, 2025
நயினாரின் பரப்புரைக்கு அடுக்கடுக்கான நிபந்தனை

நயினார் நாகேந்திரனின் மதுரை பரப்புரைக்கு 15க்கும் அதிகமான நிபந்தனைகளை போலீஸ் விதித்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் வசதி, சாலையின் இருபுறம் பேனர் வைக்க கூடாது, கூட்டத்தில் பெண்களுக்கு தனி இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் இருப்பது அவசியம் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறினால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
News October 8, 2025
10 மாவட்டங்களில் மழை வெளுத்து கட்டும்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிப்போர் வெளியே சென்றால் தவறாமல் குடை எடுத்துச் செல்லுங்கள்.