News April 16, 2025
கம்ப்யூட்டர் சயின்ஸில் இந்த கோர்ஸுக்கு தான் மவுசு ஜாஸ்தி!

AI, டேட்டா சயின்ஸ் துறை ஆண்டுக்கு 55% வளர்ச்சியடையும் சூழலில், B.tech Artificial Intelligence & Data Science படிப்புக்கே அதிக டிமாண்ட். 4 வருட கோர்ஸில், Artificial neural networks, Data analytics ஆகியவை கற்பிக்கப்படும். JEE தேர்வுகளின் மூலம் இந்த கோர்ஸில் சேரலாம். பிரஷருக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ₹4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புவோர், இதுதான் பெஸ்ட்.
Similar News
News December 25, 2025
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா?

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? கவலை வேண்டாம். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, அழுக்கடைந்த, லேசாக கிழிந்த மற்றும் 2 துண்டுகளாக கிழிந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும். காந்தி படம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் இல்லாமல் இருந்தால், அந்த நோட்டின் மதிப்பில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படும். இதற்கு எந்த படிவத்தையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
News December 25, 2025
பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரத்தை வணங்குகிறேன்: EPS

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுநாளில் EPS புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஒப்பற்ற துணிவுடனும், நிகரில்லா விவேகத்துடனும் அந்நிய ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெரும்படை திரட்டிய முதல் பெண் விடுதலைப் போராளி; தமிழினப் பெண்களின் வீரத்திற்கு சான்றாக திகழும் நம் பெரும்பாட்டியார், பேரரசி வீரமங்கை வேலுநாச்சியாரின் தியாகத்தையும், தேச பக்தியையும் போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
இந்த Dress-ஆல் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து

குழந்தைகளுக்கு Fancy ஆன, அழகழகான ஆடைகளை வாங்கினால் மட்டும் போதாது. அந்த உடைகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்பதை பெற்றோர்கள் ஆராய வேண்டும். 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு பட்டன் வைத்த சட்டைகளை அணிவிக்க வேண்டாம். அவர்கள் அதை வாயில் வைத்து கடிக்கும்போது அதிலிருக்கும் பட்டன்கள் தொண்டைக்குள் சிக்கலாம். இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தி அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். SHARE.


