News April 1, 2025
இந்த கொடூர கொலையே சாட்சி: ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்

தி.மலையில் போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், போதைப்பொருட்கள் இளைஞர்களை எப்படி சீரழிக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி என விமர்சித்த அவர், விளம்பர ஷூட்டிங்கில் வந்து ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்’ என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்த மிட்செல்

இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் 63, 134, 130 என ரன்களை குவித்து டேரல் மிட்செல் மிரட்டியுள்ளார். இதனால் புதிய ODI பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு அவர் முன்னேறுவார். இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்தாலும் முதல் இடத்தை தக்க வைக்க முடியாது. கடைசி 7 இன்னிங்சில் 4 சதங்கள், 2 அரைசதம் அடித்து மிட்செல் சிறந்த ODI வீரராக வலம் வருகிறார்.
News January 18, 2026
முட்டை விலை குறைந்தது.. HAPPY NEWS

வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட முட்டை கொள்முதல் விலை சமீப நாள்களாக குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று முட்டை கொள்முதல் விலை ₹5.30-லிருந்து ₹5.00 ஆக சரிந்துள்ளது. இதன்மூலம் கடந்த <<18882290>>2 நாள்களில்<<>> மட்டும் ₹60 காசுகள் வரை குறைந்துள்ளது. இதனால், சில்லறை கடைகளில் ₹6 வரை முட்டை விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் ஒரு முட்டை எவ்வளவு? கமெண்ட் பண்ணுங்க.
News January 18, 2026
ருக்மிணி வசந்த் காதலர் இவரா?

தமிழில் ஏஸ், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் ருக்மிணி வசந்த். இதனிடையே அவர் காதலனுடன் இருப்பதாகக் கூறி ஒரு போட்டோ வைரலானது . இந்நிலையில் அந்த போட்டோவில் உள்ளது சித்தன் என்ற போட்டோகிராபர் என்பதும், அவர் ருக்மிணியின் நெருக்கமான நண்பர் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. 2023-ல் எடுத்த இந்த போட்டோ இப்போது வைரலாகியுள்ளது.


