News April 14, 2025
இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
Similar News
News August 5, 2025
சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 6) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், வரும் 23-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News August 5, 2025
40+ வயதினர்… இதை ட்ரை பண்ணுங்க… இளமை தான்

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினசரி குறைந்தது 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால், நோய்கள் குறைவதுடன் ஆயுளும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சிகளை அதிகரித்தால், உயிரிழப்பு ஆபத்தும் குறைகிறது என்றும், 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் போது, 3 மணி நேரம் நின்று வேலை செய்தால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
News August 5, 2025
‘கிங்டம்’ படத்தை தடை செய்க: வைகோ

‘கிங்டம்’ படத்தை தமிழகத்தில் திரையிடுவதை தடை செய்ய வேண்டுமென வைகோ தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் கிங்டம். இப்படத்தில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து இலங்கை சென்றவர்களை ஈழ தமிழர்கள் அடிமைகளாக நடத்துவது போன்ற காட்சிகள் உள்ளன. ஈழ தமிழர்களை தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிடுவது வரலாற்றை சிதைக்கும் முயற்சி என வைகோ சாடியுள்ளார்.