News March 18, 2024
இந்த தடையால் கறுப்பு பணப்புழக்கம் அதிகரிக்கும்
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது ஒருவகையில் பொருளாதாரத்தை உயர்த்த உதவுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ’தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்தாலும், அரசியல் கட்சிகளுக்கு பணம் வரும். ஆனால் கறுப்பு பணமாக இருக்கும்’ என்றார்.
Similar News
News November 20, 2024
5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சில மாவட்டங்களுக்கு லீவ் விட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
News November 20, 2024
PSU நிறுவனங்களின் டிவிடெண்ட் ரூல் மாற்றம்
பொதுத்துறை நிறுவனங்களுக்கான டிவிடெண்ட், பைபேக், ஸ்பிளிட், போனஸ் பங்கு வழங்குதல் போன்ற விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள் வரிக்கு பிந்தைய லாபத்தில் குறைந்தபட்சம் 30% அல்லது நிறுவனத்தின் நிகர மதிப்பில் 4%ஐ டிவிடெண்டாக வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு டிவிடெண்ட் மூலம் கூடுதல் வருவாய் தேவைப்படுவதால் இந்த விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
News November 20, 2024
13 மாவட்டங்களுக்கு கனமழை ALERT
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் காலையில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருவதால், அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.