News September 5, 2024

இத மட்டும் செஞ்சா போதும்.. தட்கல் டிக்கெட் கன்ஃபார்ம்!

image

தட்கல் முன்பதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்பே IRCTC கணக்கு சென்று தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்கள் மூலம் முன்பதிவு செய்வதால் டிக்கெட்டை உறுதி செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும் போது Net Banking அல்லது UPI சேவையை தேர்வு செய்யலாம். இணைய வசதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Similar News

News August 4, 2025

நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை..!

image

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே, பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 7-ம் தேதி சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். SHARE IT.

News August 4, 2025

குறட்டை விட்டு தூங்குபவரா…. மருத்துவர்கள் எச்சரிக்கை!

image

உறக்கத்தின் நடுவே மூச்சுத்திணறலுடன், குறட்டையை உண்டாக்குவது ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கக் குறைபாடு. இதில் அப்ஸ்ட்ரக்டிவ் ஆப்னியாவால்(OSA) பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உறக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசம் தடைபடும். இவர்கள் போதுமான நேரம் தூங்கி எழுந்தாலும், காலையில் உடல்சோர்வை உணர்வார்கள். இந்த பிரச்னை உள்ள ஆண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என லேட்டஸ்ட் ஆய்வு எச்சரிக்கிறது.

News August 4, 2025

Gpay, PhonePe யூஸ் பண்ணால் கட்டணமா? புதிய அறிவிப்பு

image

Google Pay, PhonePe, போன்ற UPI அக்ரிகேட்டர்களை பயன்படுத்தும் வணிகர்களுக்கு, ஆக.1 முதல் சேவைக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. பரிவர்த்தனை வங்கியை பொறுத்து, ஒரு டிரான்சாக்‌ஷனுக்கு அதிகபட்சமாக ரூ.6 முதல் ரூ.10 வரை கட்டண விதிக்கப்படும். பணம் நேரடியாக வணிகரின் ஐசிஐசிஐ கணக்குக்கு சென்றால் கட்டணம் இல்லை. எனினும், UPI பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இப்போதைக்கு கட்டணம் இருக்காது.

error: Content is protected !!