News April 8, 2024
பேச்சுவார்த்தைக்கு பிடிகொடுக்காத திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் மீது அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கடும் அதிருப்தியில் உள்ளது அனைவருக்கும் அறிந்ததே. மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது, பொறுப்பு வழங்காமல் ஒதுக்கியது போன்றவையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் பரப்புரையில் அவரை ஈடுபடுத்த எண்ணி முக்கியஸ்தர் ஒருவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்கும் அவர் பிடிகொடுக்கவில்லையாம்.
Similar News
News March 20, 2026
விஜய் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: தமிழிசை

தவெகவை கூட்டணியில் இணைக்க NDA பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், விஜய் தனித்துதான் போட்டி என அறிவித்தார். இந்நிலையில். தவெக தற்போது குழப்பத்தில் இருப்பதாகவும், விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது என்றும்
தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். மேலும் , கனவு காணுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு எனவும் விஜய்யும் கனவு காண்கிறார் என்றும் கூறியுள்ளார்.
News March 20, 2026
என் சகோதரிகளை கையேந்த விடமாட்டேன்: சீமான்

திமுக, அதிமுக, தவெக என முக்கிய கட்சிகள் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்துள்ள நிலையில், நாதக தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற வாக்குறுதி இடம்பெறவில்லை. இதுகுறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, என் அம்மா, அக்கா, தங்கைகளை கையேந்த விடமாட்டேன் என்று அவர் பதிலளித்துள்ளார். அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான வழியை வேலைவாய்ப்பின் மூலம் தன்னால் உறுதியாக ஏற்படுத்தி தர முடியும் என்றும் கூறியுள்ளார்.