News March 30, 2024
திருஷ்டி தோஷம் போக்கும் திருநாமம்

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருமண்ணுக்கு உண்டாம். ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி நெற்றியில் திருநாமம் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News December 26, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

அதிமுகவில் இருந்து 3 நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, வடசென்னை நிர்வாகிகள் லண்டன் வெங்கடேஷ், விசுவாசி, கலையரசு ஆகியோர் கட்சி விதிகளை மீறி செயல்பட்டதால், அவர்களை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைக்க வேண்டாம் எனவும் EPS அறிவுறுத்தியுள்ளார்.
News December 26, 2025
சுழல் பார்வையில் மூழ்கடிக்கும் பிரியா

பிரியா பவானி ஷங்கர், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், சிவப்பு ரோஜா போல் அழகாக இருக்கிறார். அவரது அழகாக சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுது. மனமோ, இந்த பெண் போல், அழகான தேவை பூவுலகில் உண்டா என்று ஆர்ப்பரிக்கிறது. இந்த போட்டோஸ், உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 26, 2025
கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி

கணவனின் ஆணுறுப்பை மனைவி அறுத்த சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. கோவையில் வேலை செய்துவந்த அசாமை சேர்ந்த பிரதான், தனது மனைவி ஜிந்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. கண்டித்தும் திருந்தாத கணவன் பிரதானின் ஆணுறுப்பை வெட்டிவிட்டு ஜிந்தி தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், ஜிந்தியை தேடி வருகின்றனர்.


