News October 12, 2025
திருமாவளவன்… தமிழகத்தின் சாபக்கேடு: அண்ணாமலை

விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளவனின் எண்ண ஓட்டம் குழப்பத்தில் இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். எல்லாவற்றுக்கும் RSS, BJP என கூறும் திருமாவின் அரசியல் தரம் தாழ்ந்து மாறியிருப்பதாகவும், தவறு செய்தபின் தப்பிக்க RSS, BJP, அண்ணாமலை என பழிபோடுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற தலைவர்கள் இருப்பது தமிழகத்திற்கு சாபக்கேடு என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.
Similar News
News March 29, 2026
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி!

புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோன்று நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 தொகுதிகளிலும் தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
இலங்கைக்கு எரிபொருள் உதவி செய்த இந்தியா

மேற்காசிய போரால் இலங்கையில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து சில நாள்கள் முன்பு PM மோடியிடம் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பேசியிருந்தார். இதன் பலனாக 38,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் உதவிக்கு PM மோடி, EAM ஜெய்சங்கருக்கு இலங்கை அதிபர் நன்றி கூறியுள்ளார்.
News March 29, 2026
திமுக, அதிமுகவை நேரடியாக எதிர்த்து போட்டியிடும் விஜய்

2011-ல் உருவாக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2021, 2016-ல் அதிமுகவும், 2021-ல் திமுகவும் வெற்றிபெற்றன. தற்போது சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அதிமுகவின் ராஜசேகரன் களத்தில் உள்ளனர். சிறுபான்மை மக்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை விஜய் நேரடியாக எதிர்த்து களமிறங்குகிறார். <<-se>>#TNElection2026<<>>


