News February 11, 2025

உதயநிதியோடு திருமாவளவன் சந்திப்பு

image

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து உரையாடினார். இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வரோடு தனியாக பேசிய நிலையில், தற்போது மீண்டும் உதயநிதியை சந்தித்து பேசியுள்ளார். எதற்காக இந்த சந்திப்பு, என்ன கோரிக்கை முன்வைக்கப்பட்டது, ஏதேனும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Similar News

News March 4, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 627 ▶குறள்:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
▶பொருள்: துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

News March 4, 2026

CINEMA 360°: ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு சூர்யா ரெடி

image

*லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீஸர் மார்ச் 5-ல் ரிலீசாகிறது *’வித் லவ் படம்’ மார்ச் 6 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகும் என அறிவிப்பு *மறைந்த இயக்குநர் சங்கையாவின் மகளின் கல்வி நிதிக்கு யோகி பாபு ₹1 லட்சம் வழங்கியுள்ளார் *அஜித்குமாரின் அண்ணன் அணில் குமார் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் *வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திற்கு மாதம் 10 நாள்கள் கால்ஷீட் தர சூர்யா ஒப்புக்கொண்டதாக தகவல்

News March 4, 2026

SPORTS 360°: ஸ்மிருதி மந்தனா மீண்டும் நம்பர் 1

image

*ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் முதல் சுற்றில், லக்‌ஷயா சென் 23-21, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் உலகின் நம்.1 வீரர் ஷி யூவை வீழ்த்தினார் * கலப்பு இரட்டையரில் துருவ், தனிஷா இணை 2-வது சுற்றுக்கு தகுதி *ஐசிசி மகளிர் ODI பேட்டர் தரவரிசையில் ஸ்மிருதி மந்தா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் * U-17 நட்புறவு கால்பந்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது.

error: Content is protected !!