News December 8, 2024

திருமா Vs ஆதவ் அர்ஜூனா யார் கையில் விசிக?

image

ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல் என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கு நக்சல்களைக் கொண்டு வந்துவிடலாம் என திட்டமிடுகிறார்களா என தெரியவில்லை என்று சந்தேகத்தை எழுப்பினார். மேலும், விசிக யார் கையில் உள்ளது. விசிகவிற்கு ஒரு தலைமையா? அல்லது இரண்டு தலைமைகளா?. ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமா தயங்குவது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Similar News

News March 17, 2026

செங்கை: கலெக்டர் முன்பு திமுக – பாஜகவினர் மோதல்!

image

செங்கை: கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க நகர தலைவர் மகேஸ்வரன், தேர்தல் விதியை மீறி நகராட்சி பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதாக புகாரளித்தார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. நகர செயலர் நரேந்திரன், மகேஸ்வரனை கலெக்டர் முன்பே தகாத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News March 17, 2026

இந்த 12 ஆவணங்களை கொண்டும் வாக்களிக்கலாம்

image

1.ஆதார், 2.MNREGA அட்டை, 3.வங்கி (அ) அஞ்சலக பாஸ்புத்தகங்கள், 4.தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட இன்ஷூரன்ஸ் கார்டு, 5.ஓட்டுநர் உரிமம், 6.பான் கார்டு, 7.NPR-ன் ஸ்மார்ட் கார்டு, 8.பாஸ்போர்ட், 9.ஓய்வூதிய ஆவணம், 10.மத்திய, மாநில அரசுகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஐடி கார்டு, 11.MP, MLA, MLC-க்களுக்கான ஐடி கார்டு, 12.அரசால் வழங்கப்பட்ட தனித்துவ மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.

News March 17, 2026

மதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

image

தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வைகோ வெளியிடுகிறார். இதில் மக்கள் நலன் சார்ந்த, குறிப்பாக மகளிர் மேம்பாட்டுக்கான அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் சொந்த சின்னத்திலும் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

error: Content is protected !!