News March 17, 2025

பாஜக போராட்டத்திற்கு திருமா ஆதரவு

image

டாஸ்மாக்கிற்கு எதிரான பாஜகவின் போராட்டத்தை வரவேற்பதாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவை வலியுறுத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்ட அவர், மதுபானம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதுதான் எங்களின் கொள்கை, அதற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News September 23, 2025

+2 போதும்.. மத்திய அரசில் ₹21,700 சம்பளத்தில் வேலை!

image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹21,700- ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News September 23, 2025

திமுக கூட்டணியில் பூசல்: இபிஎஸ்

image

திமுக கூட்டணியில் பிரச்னை ஆரம்பித்துவிட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, திமுகவிடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்க ஆரம்பித்துவிட்டதாகவும், இதனால் இருகட்சிகளுக்கு இடையே பூசல் வெடித்துள்ளதாகவும் அவர் பிரசாரத்தில் பேசியுள்ளார். மேலும், காங்கிரசாருக்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே என கூறிய அவர், விரைவில் திமுக கூடாரம் காலி ஆகிவிடும் என கூறியுள்ளார்.

News September 23, 2025

BREAKING: மழை வெளுத்து வாங்கும்

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், செப்.29 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. செப்.25, 26, 27-ல் சில மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!