News March 25, 2025
சவுக்கு சங்கரின் வீட்டின் மீதான தாக்குதல்: திருமா கண்டனம்

சவுக்கு சங்கரின் வீட்டின் மீது நடைபெற்ற தாக்குதல் அநாகரிகத்தின் உச்சம் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் காவல்துறை நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 30, 2025
புடின் வீட்டை குறிவைத்து தாக்க முயற்சி: ரஷ்ய அமைச்சர்

ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அந்நாட்டு அமைச்சர் செர்ஜி லவ்ரோ தெரிவித்துள்ளார். நீண்ட தூரம் பயணிக்கும் 91 டிரோன்கள் கொண்டு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆனால் நடுவானிலேயே தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு அதை தாக்கி அழித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், புடின் வீடு மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.
News December 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 30, 2025
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது: EPS

திமுக 95% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுவது பச்சைப்பொய் என EPS விமர்சித்துள்ளார். திருத்தணியில் பரப்புரை மேற்கொண்ட அவர், காங்கிரஸ் மற்றும் விசிக ஆட்சியில் பங்கு கேட்பதால் திமுக கூட்டணியில் இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியுடன் கூறியுள்ளார்.


