News July 9, 2025
திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்: இபிஎஸ் சாடல்

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுபற்றி பேசிய இபிஎஸ், அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமா கண்டுபிடித்துவிட்டாரா? டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றார். எங்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் விளக்கம் சொல்வதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைவர் என அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News July 9, 2025
அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடக்கூடாது: CS

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் சர்குலர் அனுப்பியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் சம்பளமும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
கோயிலில் இருந்து வரும் போது… இத பிறருக்கு தராதீங்க

கோயிலில் இருந்து திரும்பும் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. கோயிலின் மணியை அடித்துவிட்டு வெளியே வருவது, கோயிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டுவிடும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!
News July 9, 2025
நமீபியா புறப்பட்டார் PM மோடி

பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி பேசினார். இதனையடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.