News December 6, 2024
மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி

தமிழக மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் திருக்குறள் போட்டியினை அரசு அறிவித்துள்ளது. இதில், ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி, கவிதைப் போட்டி, செல்ஃபி போட்டி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை வீடியோ, ஆடியோ அல்லது PDF வடிவில் வரும் 18ஆம் தேதிக்குள் tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News November 19, 2025
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகினார்

2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கட்சித் தாவல்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரியில் பாஜக, அதிமுகவைச் சேர்ந்த Ex MLA-க்கள் சாமிநாதன், அசனா ஆகியோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் MLA பாஸ்கர், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளது, புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
News November 19, 2025
முதல் வீரராக சாதனை

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அனைத்து Full Members அணிகளுக்கு எதிராக சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றதுடன், ODI போட்டிகளில் 19 சதங்கள் அடித்தும் புதிய மைல்கல்லை எட்டினார் ஹோப். ஆப்கன், ஆஸி, வ.தேசம், இங்கி., இந்தியா, அயர்லாந்து, நியூஸி., பாக்., தெ.ஆ., ஸ்ரீலங்கா, ஜிம்பாப்வே, வெ.இண்டீஸ் ஆகிய அணிகள் தான் Full Members அணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
News November 19, 2025
மெட்ரோ விவகாரம்: INDIA கூட்டணி ஆர்ப்பாட்டம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி, தமிழகத்தை பாஜக வஞ்சிப்பதாக மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தரப்பு விமர்சித்துள்ளது. இதனை கண்டித்து நாளை (நவ.20) கோவையிலும், நவ.21-ல் மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் INDIA கூட்டணி கட்சியினர் அனைவரும் திரளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


