News May 1, 2024
குருப்பெயர்ச்சியன்று செய்ய வேண்டிய விஷயங்கள்

சனிப்பெயர்ச்சியைப் போல் குருப்பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெறுவதால், குருபகவானுக்கான சிறப்பு வாய்ந்த கோவில்கள் மட்டுமின்றி நவக்கிரகங்கள் உள்ள அனைத்துக் கோவில்களிலும் வழிபாடு செய்யலாம். குரு பகவானை மஞ்சள் துணி, சுண்டல், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வழிபட்டால் நன்மை கிடைக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை இரண்டாவதாக வழிபட வேண்டும். முதலில் நவகிரகங்களில் உள்ள குருபகவானைத்தான் வழிபட வேண்டும்.
Similar News
News March 11, 2026
BREAKING: மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், வைகோ முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றி பெற்றது.
News March 11, 2026
சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வி

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. கடும் அமளியை அடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, 18-வது லோக்சபாவில் காங்கிரஸ் MP-க்கள் இதுவரை 157 மணிநேரம் பேசியுள்ளனர். ஆனால், சபாநாயகர் பேசவிடாமல் பாரபட்சம் காட்டுவதாக காங்., குற்றஞ்சாட்டுவதாக அமித்ஷா தெரிவித்தார்.
News March 11, 2026
‘சிலிண்டர் தட்டுப்பாடு’ பயம் வேண்டாம்: PM மோடி

கொரோனா பேரிடர் நெருக்கடியை போல சிலிண்டர் தட்டுப்பாட்டில் இருந்து இந்தியா மீளும் என PM மோடி கூறியுள்ளார். மேற்கு ஆசிய போர் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், போரினால் எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.


