News April 6, 2024
வெப்ப அலையின் போது தவிர்க்க வேண்டியவை!

வெப்ப அலை காலத்தில், குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், காபி, தேநீர் , கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். நண்பகலில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம், உப்பு, காரமான, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வெப்பத்தை உருவாக்கக்கூடிய ஒளிரும் ஒளி விளக்குகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
Similar News
News August 27, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17531359>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. 2009
2. பானு அத்தையா
3. 33%
4. யென்
5. 1912
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 27, 2025
BREAKING: இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள EPS வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ப நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இபிஎஸ் இல்லத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் 20-க்கும் மேற்பட்ட போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
News August 27, 2025
குஜராத் மாடலில் தொடங்கிய வாக்கு திருட்டு: ராகுல் காந்தி

வாக்கு திருட்டு நடப்பதாலேயே, அடுத்த 40 ஆண்டுகளுக்கு BJP ஆட்சியில் இருக்கும் என அமித்ஷாவால் கூற முடிகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹார் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாடலில் இருந்து BJP, வாக்குகளை திருடத் தொடங்கியதாகவும் கடுமையாக விமர்சித்தார்.