News April 16, 2025
திலகபாமா, வடிவேல் ராவணன் சமரசம்

அன்புமணியை பாஜக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று திலகபாமா கடுமையாக விமர்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த வடிவேல் ராவணன், பாமகவில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். இது பாமகவில் உள்கட்சி மோதலுக்கு மேலும் வழிவகுத்தது. இந்நிலையில் இருவரையும், தனது இல்லத்திற்கு அழைத்து அன்புமணி சமரசம் செய்து வைத்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Similar News
News October 16, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் விலை ₹1000 குறைந்தது

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய வெள்ளி விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹206-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று 3 நாள்களில் வெள்ளி விலை ₹17 ஆயிரம் உயர்ந்த நிலையில், இன்று வெறும் ₹1000 குறைந்துள்ளது.
News October 16, 2025
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா இந்தியா?

ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என PM மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மாஸ்கோவை பொருளாதார ரீதியாக தாக்கும் முயற்சிகளில் இது ஒரு பெரிய அடி என கூறிய அவர், அடுத்ததாக சீனாவையும் இதையே செய்ய வைக்கப் போகிறேன் என சவால் விடுத்துள்ளார். டிரம்ப்பின் இந்த கூற்றுக்கு இந்தியா இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
LSG அணியில் இணைந்தார் கேன் வில்லியம்சன்!

LSG அணியின் வியூக ஆலோசகராக (Strategic Advisor) கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் தலைமையிலான அணியில் அவர் ஹெட் கோச் ஜஸ்டின் லேங்கருடன் இணைந்து வியூகங்களை வகுக்கவுள்ளார். 2018, 2019 & 2021-ம் ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளதால், கேன் வில்லியம்சன் வருகை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என LSG நிர்வாகம் நம்புகிறது.