News April 13, 2024
திருமாவளவனை சந்தித்த தியாகராஜன் குமாரராஜா!

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளராக போட்டியிடும் திருமாவளவன், வீடு, வீடாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அமைச்சர் சிவசங்கர், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் திருமாவளவனை இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
Similar News
News January 27, 2026
பாலிவுட் அதன் ஆன்மாவை இழந்துவிட்டது: பிரகாஷ் ராஜ்

இந்தி சினிமாக்கள் இப்போது மியூசியத்தில் உள்ள பிளாஸ்டிக் சிலைகள் போல் பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். மேலும், பாலிவுட் அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமில்லை என்றும், ஆனால் ஜெய் பீம், மாமன்னன் போன்ற தென்னிந்திய படங்கள் மண்வாசனையோடு இன்னும் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன எனவும் பேசியுள்ளார்.
News January 27, 2026
மனைவிக்காக ப்ரோமோஷன் செய்யும் டிரம்ப்

தனது மனைவியும், US-ன் முதல் பெண்மணியுமான மெலனியா குறித்த ஆவணப்படத்தை காண டிக்கெட் எடுங்கள் என்ற டிரம்ப்பின் ட்விட் சர்ச்சையாகியுள்ளது. பனிப்புயல் ஒருபக்கம், குடியேற்ற அதிகாரிகளால் நடந்த கொலை மறுபக்கம் என அமெரிக்காவே முடங்கியுள்ளது. இதற்கிடையே மெலனியா ஆவணப்படம் வெள்ளை மாளிகையில் சிறப்பு திரையிடப்பட்டது அந்நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் ஜன.30-ம் தேதி ரிலீசாகிறது.
News January 27, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 593 ▶குறள்: ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். ▶பொருள்: ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.


