News September 30, 2025
இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, TNPSC அண்மையில் நடத்திய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி ₹1,000 கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பயனாளிகளை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க உள்ளார்களாம். SHARE IT.
Similar News
News March 16, 2026
மேட்டூர் பாலடைந்த கட்டிடம் அருகே ஆண் சடலம்!

மேட்டூர் அரசு ஐடிஐ அருகே உள்ள பாலடைந்த கட்டிடம் முன்புறம் மரத்தில் ஆண் சடலம் தொங்குவதாக மேட்டூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் பொன் நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பது தெரியவந்தது. இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 16, 2026
தவெக சின்னத்தில் குழப்பம்… அருண்ராஜ்

வயதான பெரியோர்களுக்கு தவெகவின் சின்னத்தில் குழப்பம் உள்ளதாக அருண்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தவெகவின் கொடியில் யானை இருப்பதால், சின்னம் யானையா? விசிலா என்பதில் வயதான பெரியோர்கள் பலரும் குழப்பத்தில் இருப்பதால் நிர்வாகிகள் அதனை போக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். உதயசூரியன், இரட்டை இலை சின்னங்களை போல விசிலை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தவெகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
News March 16, 2026
திமுகவில்தான் உண்மையான அதிமுக உள்ளது: தம்பிதுரை

திமுகவில் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் பலரும் அதிமுக பாசறையில் பயிற்சி பெற்றவர்கள்தான் என தம்பிதுரை கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் பேசிய அவர், அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, செந்தில்பாலாஜி, ரகுபதி, சேகர்பாபு, EV வேலு என இவர்கள் அனைவருமே அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான் என்றும், உண்மையான அதிமுக திமுகவில்தான் ஒரு பக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.


