News October 17, 2025

இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

image

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும், அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ₹1,000 கிடைப்பதில் சிக்கல் வரும். SHARE IT.

Similar News

News October 18, 2025

விற்பனைக்கு வந்த RCB: வாங்க போவது இவர்கள் தானா?

image

மதுபான விளம்பரங்களை ஒலிபரப்ப மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் RCB அணியை விற்க, அதன் தாய் நிறுவனமான Diageo முடிவு செய்துள்ளது. RCB-ஐ வாங்க ஆதார் பூனவாலா (சீரம் இன்ஸ்டிடியூட்) , பாரத் ஜிண்டால் (JSW குழுமம்), அதானி குழுமம், டெல்லியை சேர்ந்த நிறுவனம் மற்றும் 2 அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. பிரிட்டனை சேர்ந்த மதுபான நிறுவனம் தான் Diageo என்பது குறிப்பிடத்தக்கது.

News October 18, 2025

ஆப்கானியர்கள் உடனே வெளியே வேண்டும்: பாக்., அமைச்சர்

image

பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கானியர்கள் உடனே தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என பாக்., அமைச்சர் கவாஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்கள் நிலத்தின் வளங்கள் தங்களது மக்களுக்கே எனவும், ஆப்கனுடன் இனியும் நட்புறவை நீட்டிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆப்கான் ஆட்சியாளர்கள் இந்தியாவின் மடியில் அமர்ந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News October 18, 2025

நாட்டில் தலித்தாக இருப்பது குற்றமா? ராகுல் காந்தி

image

உ.பி.யில் சமீபத்தில் திருடன் என நினைத்து ஹரிஓம் வால்மீகி என்பவர் அடித்து கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நாட்டில் தலித்தாக இருப்பது பெரும் குற்றமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, மனநலம் பாதிக்கப்பட்ட ஹரிஓம், உயிரிழக்கும் தருவாயில் ‘ராகுல் காந்தி என்னை காப்பாற்றுங்கள்’ என கூறியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!