News June 16, 2024
நாளை மறுநாள் வங்கிக் கணக்கில் வருகிறது ₹2000

மத்திய அரசு ‘பிரதமர் கிசான்’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 பணத்தை 3 தவணைகளாக (₹2,000 வீதம்) வழங்கி வருகிறது. இது வரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 17வது தவணை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி நாளை மறுநாள் (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
81.37% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள்: ECI

கடந்த நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (நவ.13) மதியம் 3 மணி வரை 81.37% வாக்காளர்களுக்கு SIR கணக்கீட்டு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 5.21 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
News November 13, 2025
நாட்டாமை சாதிப்படம் கிடையாது: சரத்குமார்

‘நாட்டாமை’ சாதிப்படம் கிடையாது என்று சரத்குமார் கூறியுள்ளார். தீர்ப்பு வழங்கக்கூடிய ஒருவரின் திறன் உள்ளிட்ட பண்புகளை பற்றி மட்டுமே சொல்லக்கூடிய படமாக அது இருந்தது என்றும், ‘தேவர் மகன்’ படமும் சாதியை திணிக்கும் படமல்ல எனவும் விளக்கமளித்துள்ளார். மாரி செல்வராஜின் படங்கள், ஏற்கெனவே நிகழ்ந்தவற்றை மீண்டும் அழுத்தமாக கூறுவதாக உள்ளதாகவும், தனக்கு சமத்துவமே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
News November 13, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ‘உடன்பிறப்பே வா’ என்ற ஒன்-டூ-ஒன் ஆலோசனையை CM ஸ்டாலின் இன்று மேற்கொண்டார். அப்போது, விடுபட்டவர்களில், தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற்றுத் தர திமுகவினர் உதவ வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்போருக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


