News June 10, 2024
இலங்கை சென்றால் கொன்று விடுவார்கள்: மதுரை ஆதீனம்

பிரதமரை நேரில் சந்தித்து தமிழீழம் கேட்கப்போவதாக, மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், தான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என்றார். இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு தமிழர்கள் வாக்களித்திருப்பது வருத்தம் எனவும், அதனால்தான், அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News September 3, 2025
50% வரி விதிக்க சொன்னதே மோடி தான்: ஆ.ராசா

50% வரியை டிரம்ப் விதிக்கவில்லை, அதை போடச் சொன்னதே PM மோடி தான் என்று ஆ.ராசா சாடியுள்ளார். USA-வின் கூடுதல் வரிவிதிப்புக்கு எதிராக திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை விற்றுக் கொண்டிருப்பதாகவும், அம்பானியும் அதானியும் இந்தியாவை வாங்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். USA-வின் வரிவிதிப்பால் தமிழகத்திற்கு அதிக பாதிப்பு என ஸ்டாலின் கூறியிருந்தார்.
News September 3, 2025
இளையராஜா விழாவில் விஜய், அஜித்?

செப்.13-ல் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இந்நிகழ்வில் ரஜினி, கமல், மற்ற திரையுலக ஜாம்பவான்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டில் இருக்கும் CM ஸ்டாலின், தமிழகம் திரும்பிய பிறகு இவ்விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதற்கு திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விஜய், அஜித் பங்கேற்பார்களா?
News September 3, 2025
கில்லை வைத்து BCCI போடும் ப்ளான் : உத்தப்பா

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர்களை தவிர்த்துவிட்டு சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்ததற்கு பின்னால் பக்கா பிஸ்னஸ் உள்ளதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், சச்சின், தோனி, கோலி, ரோஹித் வரிசையில் கில்லை, இந்திய அணியின் பிராண்டாக BCCI மாற்றவுள்ளது என்றார்.