News October 2, 2024
இவர்களுக்கும் ₹1,000 வழங்கப்படும்: கனிமொழி MP

விடுபட்ட மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வழங்கப்படும் என கனிமொழி MP தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை கணக்கெடுப்பு குறித்த பணிகள் தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டதாக கூறிய அவர், விடுபட்டவர்களுக்கு உரிமைத் தொகை ₹1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் செய்துவருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 16, 2025
சஞ்சுவுக்கு அதிகரிக்கும் மவுசு.. போட்டியில் KKR?

சஞ்சு சாம்சன் RR அணியை விட்டு விலகுகிறார் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் CSK-ல் தான் இணைகிறார் எனக் கூறப்படும் நிலையில், அவரை தங்கள் பக்கம் இழுக்க KKR-ம் தயாராகியுள்ளது. ரகுவன்ஷி அல்லது ரமன்தீப் சிங் இருவரில் ஒருவரை ட்ரேட் செய்து சஞ்சுவை அணிக்கு கொண்டுவர KKR முயற்சிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சஞ்சு எந்த டீமில் சேர வேண்டும் CSK or KKR.. நீங்க சொல்லுங்க?
News August 16, 2025
மசோதாக்கள் ஒப்புதலுக்கு காலக்கெடு: மத்திய அரசு பதில்

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலம் தாழ்த்துவது குறித்து TN அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ஜனாதிபதி, கவர்னர்களுக்கு SC காலக்கெடு விதித்தது. இதற்கு எதிராக ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதத்தில், ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
News August 16, 2025
BREAKING: நாளை கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்

நாளை திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். பொதுக்குழுவில் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி, கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. திமுகவை அட்டாக் செய்யும் அன்புமணி, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய விரும்பும் நிலையில், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், நாளை அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.