News September 21, 2025

தவெகவை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்: விஜய்

image

ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகி வரும் அங்கீகாரத்தை கண்டு பலர் அஞ்சி நடுங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் பரப்புரையில் பங்கேற்ற அனைவருக்கும் X பதிவில் நன்றி தெரிவித்துள்ள அவர், தமிழக மக்களுக்கான முதன்மை சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்ய மாட்டோம் என கூறியுள்ளார். புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.

Similar News

News September 21, 2025

வேலைவாய்ப்பு குறித்து TN அரசு போலி விளம்பரம்: அதிமுக

image

தொழில்துறையில் வேலைவாய்ப்பு, முதலீடுகள் குறித்து திமுக அரசு போலி விளம்பரம் செய்வதாக அதிமுக சாடியுள்ளது. 1,010 ஒப்பந்தங்கள் போடப்பட்டு 34 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக TRB ராஜா பேசிய நிலையில், TN-ல் 32 லட்சம் தொழில்துறை வேலைகள் மட்டுமே உள்ளதாக ASI தரவுகளை அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது. திமுக ஆட்சியில் 34 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கியதாக கோருவது, கற்பனையே என்று அதிமுக விமர்சித்துள்ளது.

News September 21, 2025

டாஸ்மாக் கடைகளில் இனி ரூல்ஸ் மாறுது!

image

மதுக்கடைகளில் இனி வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதனால், கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா காலத்தில் மதுப்பிரியர்களை வரிசையில் நிற்க வைத்து சமூக இடைவெளியுடன் மது விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த ரூல்ஸ் உங்களுக்கு ஓகேவா?

News September 21, 2025

55,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஸ்டாலின்

image

தூத்துக்குடியில் ₹30 ஆயிரம் கோடி முதலீட்டில், 55,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 2 கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக அமையும் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதன் மூலம் சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு தற்போது தூத்துக்குடியில் அமையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!