News March 9, 2025
என்னை சிக்க வைத்துவிட்டனர்: கோர்ட்டில் கதறிய நடிகை

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது கதறி அழுதார். நான் எப்படி இந்த விவகாரத்துக்குள் வந்தேன் என இப்போது வரை புரியவில்லை; நான் இந்தக் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டு விட்டேன். என்னால் தூங்கவே முடியவில்லை என கோர்ட்டில் வழக்கறிஞர்களிடம் கூறி கதறி அழுதார். துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News March 10, 2025
அது சினிமா படப்பிடிப்பு: பிக்பாஸ் விக்ரமன் விளக்கம்

சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், இளைஞருக்கு பெண் வேடமிட்டு வந்து ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வெளியாகியது. பின்னர், அது பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் என செய்திகள் வந்தன. இந்நிலையில், அது சினிமா படப்பிடிப்பு என்றும், அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விக்ரமன் எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.
News March 10, 2025
இப்போதே வேட்பாளரை தேர்வும் செய்யும் இபிஎஸ்?

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகிறது. இந்நிலையில் பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான் தங்கம் நிறுத்தப்படுவதாக இபிஎஸ் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜான் தங்கம் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள நிலையில், இந்த முறை எம்எல்ஏ ஆக வேண்டும், வேட்பாளர் நீதான் என இபிஎஸ் உறுதியளித்துள்ளாராம்.
News March 10, 2025
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் யாருக்கு?

CT இறுதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ரோகித் சர்மா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர் முழுவதும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்திராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 263 ரன்களை அவர் குவித்துள்ளார்.