News February 2, 2025

ஜோக் அடித்ததை சீரியஸாக எடுத்துக் கொண்டனர்: கௌதம்

image

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ தனது படமில்லை என காமெடியாக சொன்னது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக இயக்குநர் கௌதம் தெரிவித்துள்ளார். படத்தின் 2ஆம் பாதியில் தனக்கு உடன்பாடில்லை எனவும், ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் பிஸியாக இருந்ததால், தான் நினைத்தபடி படத்தை எடுக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தனுஷ் உடனான பிரச்னையில், அவரே 2ஆம் பாதியை இயக்கியதாக சர்ச்சை எழுந்த நிலையில், கௌதம் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 13, 2026

எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: US

image

ஈரான் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய எண்ணெய் சரக்கு கப்பல்கள் காத்து கிடக்கின்றன. இந்நிலையில் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு தாங்கள் பாதுகாப்பு வழங்க முடியாது; ஈரானை தாக்குவதில் தான் தங்கள் கவனம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் துணிச்சலுடன் கடந்து செல்ல வேண்டும் என US கூறிய நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளது.

News March 13, 2026

ஈரான் அதிபருடன் பேசிய PM மோடி

image

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியனுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பொதுமக்களின் உயிரிழப்பு & உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகம் ஆகியவை தனது முதன்மையான முன்னுரிமைகள் என்பதையும் ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!