News January 24, 2025

கட்சி ஆரம்பித்த உடன் ஆட்சிக்கு வரனும்னு நினைக்கிறாங்க: CM

image

ஆட்சிக்கு வர வேண்டுமென தொடங்கப்பட்ட இயக்கமல்ல திமுக, மக்களுக்காக உழைக்க தொடங்கப்பட்டது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி ஆரம்பித்த உடன் ஆட்சிக்கு வர வேண்டுமென சிலர் நினைப்பதாகவும், அநாதை நிலையில் சுற்றித் திரிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென நினைப்பதாகவும் கடுமையாகவும் சாடியுள்ளார். நாட்டு மக்களுக்காக உழைப்பது போல் நாடகம் போடுபவர்கள் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 29, 2025

மெஸ்ஸியின் இந்தியா டூர்: அட்டவணை வெளியானது

image

இந்திய கால்பந்து ரசிகர்களே, உங்கள் விருப்பமான மெஸ்ஸியின் இந்திய பயண அட்டவணை வெளியாகிவிட்டது. இதன்படி, டிச.13 காலையில் கொல்கத்தா, அன்று மாலை ஹைதராபாத், டிச.14-ல் மும்பை, 15-ல் டெல்லியில் அவர் விளையாட்டு, நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக, கொச்சி வருவதாக இருந்த மெஸ்ஸியின் பயணம் ரத்தானது. இப்பயணத்தையொட்டி, இந்திய மக்களின் அன்புக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்துள்ளார்.

News November 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 29, கார்த்திகை 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம் ▶சிறப்பு: சனி வழிபாட்டு நாள். ▶வழிபாடு: கோளறு பதிகம் பாடி நவகிரகத்தின் ஆசியை பெறுதல்.

News November 29, 2025

2 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

மணிக்கு 7 கிமீ., வேகத்தில் ‘டிட்வா’ புயல் நகர்ந்து வருவதாக IMD கூறியுள்ளது. புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 370 கிமீ., தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கில் 470 கிமீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூரில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது.

error: Content is protected !!