News January 25, 2025
பழைய இரும்பு கடையில் கூட வாங்க மறுக்கிறார்கள்: CONG

பழைய இரும்பு கடையில் கூட வாங்க மறுக்கும் அளவுக்கு மடிக்கணினி தரம் இருந்ததால் அத்திட்டம் நிறுத்தப்பட்டதாக TN CONG தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு மாற்றாக கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்த நிலையிலும், தமிழக அரசு நிதி மேலாண்மையை சிறப்பாக கையாள்வதாகவும் பாராட்டியுள்ளார்.
Similar News
News November 5, 2025
கோர ரயில் விபத்து..11 அப்பாவி பயணிகள் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் ஜெயராம் நகர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. நேற்று (நவ.11) மாலை 4 மணிக்கு நடந்த இவ்விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு, ரெட் சிக்னல் விழுந்தும் பயணிகள் ரயிலை நிறுத்தாததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News November 5, 2025
மனிதர்கள் தடயமே இல்லாமல் போவார்கள்: நாசா எச்சரிக்கை

பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதால், மனிதர்களே வாழ முடியாத நிலை உருவாகலாம் என நாசா எச்சரித்துள்ளது. நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் கடல்களில் உள்ள நுண்ணுயிர்கள் வெப்பமயமாதல் & அமிலமயமாக்கல் காரணமாக குறைந்து வருகின்றனராம். மேலும், காடுகளை அழிப்பது, மாசு அதிகரிப்பு, கார்பன் டைஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றால் பூமியில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருகிறதாம்.
News November 5, 2025
BREAKING: விஜய் கண்ணீருடன் அஞ்சலி

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. பொதுக்குழு தொடங்கிய உடன் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செய்தார். இதன்பின், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு விஜய் உள்ளிட்ட அனைத்து தவெக நிர்வாகிகளும் கண்ணீருடன் மெளன அஞ்சலி செலுத்தினர்.


