News April 4, 2025
மறைந்தார் ‘அவர்கள்’ ரவிக்குமார்!

தமிழ், மலையாள மொழிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரவிக்குமார், இன்று சென்னையில் காலமானார். கமல் – ரஜினி நடித்த ‘அவர்கள்’ படத்தில், இவரின் கேரக்டர் ரசிகர்களை ஈர்க்க, அதன்பின் ‘அவர்கள்’ ரவிக்குமார் என்பதே இவரின் பெயரானது. யூத், ரமணா, லேசா லேசா, விசில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP!
Similar News
News August 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 442
▶குறள்: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
▶ பொருள்: வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
News August 29, 2025
ஆயுள்காலம் அதிகரிக்க இதுதான் ஒரே வழி…

இந்தியாவின் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தை 3.5 ஆண்டுகள் அதகரிக்கலாமாம். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்ததால், டெல்லி மக்களின் ஆயுள்காலம் 8.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் எனவும் சிகாகோ பல்கலையின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மாசு குறைந்து ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்பிருக்கா மக்களே?
News August 29, 2025
பாரதத்தை புரிந்து கொள்ள சமஸ்கிருதம் அவசியம்: RSS

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையான குருகுலக் கல்வி, உலகின் நம்பர் 1 கல்வி மாடலான ஃபின்லாந்தின் கல்வி மாடலை போன்றது என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆகையால், குருகுலக் கல்வியை மாற்றாமல், அதை இன்றைய நவீன கல்வியுடன் இணைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நமது பாரதத்தை புரிந்து கொள்ள சமஸ்கிருதம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.