News March 6, 2025
என்னை மிரட்டி செய்ய வைத்தனர்: நடிகை ரன்யா ராவ்

தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைதான நடிகை ரன்யா ராவிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தன்னை சிலர் மிரட்டி தங்கக் கடத்தலில் ஈடுபடச் செய்ததாக ரன்யா ராவ் கூறியுள்ளார். முன்னதாக, துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்தபோது பெங்களுரில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், நடப்பாண்டில் மட்டும் 10 முறை அவர் துபாய் சென்று வந்தது தெரியவந்துள்ளது.
Similar News
News March 6, 2025
UAEஇல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை

UAEஇல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் முகமது ரீனாஸ், முரளிதரன் என்பதும் தெரிய வந்துள்ளது. UAE பிரஜையை கொலை செய்த வழக்கில் ரீனாசும், இந்திய தொழிலாளியை கொலை செய்த வழக்கில் முரளிதரனுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை இந்திய தூதரகத்திடம் UAE அரசு தெரிவித்துள்ளது.
News March 6, 2025
பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம்

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன், இணையத்தில் ஆபாச படங்கள் பார்த்த மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு சைபர் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News March 6, 2025
15 ஆண்டுகளுக்கு பின் பழைய முறையில் மரண தண்டனை

அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுட்டுக் கொல்லும் (Firing Squad) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2001ல் முன்னாள் காதலியின் பெற்றோரை கொலை செய்ததற்காக, பிராட் சிக்மோன் (67) என்பவருக்கு நாளை இத்தண்டனை வழங்கப்பட உள்ளது. 1608ல் அறிமுகமான இந்த தண்டனை முறை, கடைசியாக 2010ல் செயல்படுத்தப்பட்டது. 1980களுக்குப் பிறகு பெரும்பாலும் இதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்தும் முறையே பின்பற்றப்பட்டது.