News August 12, 2024
மகாலட்சுமி அருள் இவர்களுக்கு இல்லை

1.தன்னம்பிக்கையற்றவர்கள் 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள். 11. குரு நிந்தனை செய்பவர்கள், 12. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள், 13. பிறர்மனை விரும்புகிறவர்கள், 14 ஆணவம் கொண்டவர்கள்.
Similar News
News April 2, 2026
விஜய் பிரசாரம்.. வந்தது முக்கிய அறிவிப்பு

விஜய் இன்று திருச்சியில் மரக்கடை MGR சிலை அருகே மதிய நேரத்தில் பிரசாரம் செய்கிறார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டாம் என தவெக கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு பதிலாக SM & தொலைக்காட்சி நேரலைகளில் பிரசாரத்தை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் பிரசார வாகனத்தை பின்தொடர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.<<-se>>#TNElection2026<<>>
News April 2, 2026
IPL: இன்று KKR Vs SRH

IPL-ல், இன்று KKR, SRH அணிகள் கொல்கத்தாவில் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோற்றதால், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளன. கொல்கத்தா ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால் ஆட்டத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் பறக்க வாய்ப்புள்ளது. எனவே, போட்டியில் சிறப்பாக பந்துவீசும் அணியே வெற்றிபெறும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். யார் ஜெயிக்க வாய்ப்புள்ளது?
News April 2, 2026
திமுகவுக்கு ஓட்டு கிடையாது: மீனவர் நல அமைப்பு

வரும் தேர்தலில் தங்களின் ஆதரவு திமுகவுக்கு இல்லையென தென்னிந்திய மீனவர் நல சங்கம் அறிவித்துள்ளது. 2021-ல் திமுக சார்பில் வெற்றிபெற்ற மீனவர் சமுக வேட்பாளருக்கு அமைச்சரவையில் இடமளிக்க கோரிக்கை வைத்ததாக தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி தெரிவித்துள்ளார். ஆனால் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை, இம்முறை வாய்ப்பும் அளிக்காததால் திமுகவை புறக்கணித்து, மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என கூறியுள்ளார்.


