News April 3, 2024
₹1,000 வழங்க மாட்டோம் என மிரட்டுகின்றனர்

சுவர் விளம்பரத்திற்கு அனுமதிக்காவிட்டால் ₹1,000 கிடைக்காது என திமுகவினர் மிரட்டுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர், சின்னம் குறித்து வீடுகளின் சுவர்களில் வரைந்து விளம்பரம் செய்வார்கள். அதற்கு அனுமதிக்காத வீடுகளுக்கு ₹1,000 வழங்கப்படாது என பெண்களை திமுகவினர் அச்சுறுத்துவதாகக் கூறிய இபிஎஸ், தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது எனக் கூறினார்.
Similar News
News November 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.
News November 2, 2025
மாவோயிஸ்ட் பயங்கரவாதம்: மோடி சூளுரை

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
News November 2, 2025
மாரி செல்வராஜுக்கு எதிராக பொங்கிய ஆராத்யா

மாரி செல்வராஜின் படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு, டெடிகேட்டிவான ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன், அது மலையாளி என்றால் கூட பிரச்சனையில்லை என மாரி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை ஆராத்யா, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் உள்ளோம், எங்களுடைய உழைப்பு உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்துசேரவில்லையா என கேட்டுள்ளார்.


