News April 5, 2024
வேலையில்லாமல் இருப்பது அவர்கள்தான்

நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ப.சிதம்பரமும், ராகுல் காந்தியும் தான் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் திமுக அரசு சுணக்கம் காட்டுவதாகக் கூறிய அவர், மக்களின் பிரச்னைகளை தீர்க்க பாஜகவால் மட்டுமே முடியும் என அவர்கள் நம்புவதாக தெரிவித்தார். முன்னதாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை இரட்டிப்பாகியுள்ளதாக ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
Similar News
News April 5, 2026
விசிகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: திருமா

புதுச்சேரியின் ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் தொகுதி விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என திருமா தெரிவித்துள்ளார். டெல்லி தலைமை கேட்டுக் கொண்டதன்பேரில், இந்த தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம் என்று திருமா கூறியுள்ளார். அதேநேரம், உழவர்கரை தொகுதியில் விசிகவே போட்டியிடுகிறது என்றும் தெரிவித்துள்ளார். நான் போட்டியிடவில்லை என நேற்று திருமா அறிவித்திருந்தார்.
News April 5, 2026
FLASH: பெட்ரோல் விலை இங்கு ₹80 குறைந்தது

பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை ஒரே நாளில் லிட்டருக்கு ₹80 குறைத்து PM ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு இடையே பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ₹458 ஆக உயர்ந்தது. மக்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், சற்று நிம்மதி அளிக்கும் வகையில் விலை ₹378 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் அரசு பஸ்களில் ஒரு மாதத்திற்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 5, 2026
இனி பூத் ஸ்லிப்புக்கு பதில் இதுதான்..

ஏப்.10 முதல் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என ECI அறிவித்துள்ளது. பூத் ஸ்லிப்புக்கு பதில் இச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இதில் வாக்காளரின் பெயர், வாக்குப்பதிவு நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். வரும் 17-ம் தேதிக்குள் இச்சீட்டுகள் கொடுக்கும் பணியை முடிக்க வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


