News October 19, 2025

தீபாவளிக்கு சொந்த இவர்கள் ஊருக்கு செல்ல முடியாது

image

தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த நகராட்சிகளில் இருந்து மழைக்கால தடுப்பு பணிகளில் ஈடுபடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

மூலிகை: மந்தாரையின் அசத்தல் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மந்தாரை செடியின் பட்டையை இடித்து, நீரில் சுண்டக்காய்ச்சி குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும் ■மந்தாரை இலைகள் வாதநோய், தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது ■கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றுக்கு மந்தாரை இலை சிறந்த மருந்து ■காயங்கள், கட்டிகளுக்கு மந்தாரை இலைச்சாறு மருந்தாகப் பயன்படுகிறது.

News October 19, 2025

திமுகவில் இணைந்தனர்

image

அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மாற்றுக்கட்சிகளில் முக்கிய முகமாக இருப்பவர்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

News October 19, 2025

3 நாள்களில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

image

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 6,15,992 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!