News April 23, 2025
அவர்கள் மனிதர்கள் அல்ல… விலங்குகள்: உமர் அப்துல்லா

தங்கள் மாநிலத்திற்கு விருந்தினர்களாக வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அருவருப்பானது என J&K CM உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மனிதர்கள் அல்ல, விலங்குகள் எனவும், அவர்களை கண்டிக்க வார்த்தைகள் மட்டும் போதாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சமீப காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் கொடியது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
Delhi Blast: மேலும் ஒருவர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. 15 பேர் உயிரிழந்த இச்சம்பவத்தில், ஏற்கெனவே 7 பேர் கைதாகியுள்ள நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியை சேர்ந்த பிலால் நசீர் மல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு உதவிகள் செய்ததாகவும், குண்டுவெடிப்பு குறித்த ஆதாரங்களை அழித்ததாகவும் NIA குற்றஞ்சாட்டியுள்ளது.
News December 10, 2025
பாலும் வாழைப்பழமும் ஏன் நல்லது தெரியுமா?

உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து பற்றி கவலையாக இருக்கிறதா? பாலும், வாழைப்பழமும் டிரை பண்ணுங்க. இவை, குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதை எடுத்துக்கொள்வதால், குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News December 10, 2025
தமிழக பொறுப்பு டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை

தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெங்கட்ராமன் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ஹாஸ்பிடல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


