News April 14, 2025
காசியில் இவர்களை தகனம் செய்ய அனுமதியில்லை..!

புனித நகரமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் காசியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்தால் அவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. ஆனால், அங்கு எல்லோரையும் தகனம் செய்ய அனுமதி கிடையாது. சாதுக்கள், 12 வயதுக்குட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாம்புக் கடியால் இறந்தவர்கள், தோல் நோய் இருந்தவர்களின் உடல்களை காசியில் தகனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லையாம்.
Similar News
News November 23, 2025
மலேசியா விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

மலேசியாவில் நடைபெற உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது கான்சர்ட் போன்ற ஸ்டைலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். ஆரம்பத்தில் ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் விஜய் பாடல்களை பாடி விட்டு, அதன்படி ஆடியோ லான்ச் நடத்த திட்டமிடப்படுள்ளது. இதற்காக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, பாஸ்கள் விற்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
News November 23, 2025
வர்த்தகம் 360°: இந்திய ரயில்வே படைத்த புதிய சாதனை

*இந்தியா இஸ்ரேல் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது. *நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சம் கோடி டன் சரக்குகளை கையாண்டு இந்திய ரெயில்வே சாதனை படைத்துள்ளது. *கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, இந்தாண்டு அக்டோபர் வரையிலான கணக்கெடுப்பின்படி இந்தியாவின் ஏற்றுமதி 11.8% சரிந்துள்ளது.
News November 23, 2025
உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் ஏற்பாடு: நயினார்

மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதிலேயே நான்கரை ஆண்டுகளை திமுக வீணடித்து விட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். கஞ்சா, போதை பொருட்களை ஒழிக்காத ஸ்டாலின், சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் சாடினார். ஆனால் உதயநிதியை முதல்வராக்கும் ஏற்பாடுகளை ஸ்டாலின் செய்து வருவதாக விமர்சித்தார். மேலும் நெல் ஈரப்பத அதிகரிக்க முழு காரணம் திமுகதான் எனவும் தெரிவித்தார்.


