News March 31, 2025
நாளை முதல் இந்த UPI கணக்குகள் செயல்படாது

நீங்கள் உங்களது பழைய செல்போன் எண்ணில் GPay/PhonePe உள்ளிட்ட UPI செயலிகளை பயன்படுத்தி வந்தால், அவை நாளையோடு செயல்படாமல் போகலாம். UPI கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலாகவுள்ளன. அதன்படி, செயல்படாமல் இருக்கும் செல்போன் எண்கள் UPI அப்ளிகேஷனுடன் இணைக்கப்பட்டிருந்தால், அந்த கணக்குகள் உடனடியாக செயலிழப்பு செய்யப்படும்.
Similar News
News January 17, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 17, தை 3 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News January 17, 2026
போதைப்பொருள் கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை

கடந்தாண்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து தமிழக போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பொது போக்குவரத்தை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனால் பஸ், ரயில், விமானநிலையங்களை கண்காணிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. SI தலைமையில் 2 போலீசார் அடங்கிய இத்தனிப்படைகளின் முழுநேர பணியே, போதைப் பொருள் கடத்தலை தடுப்பதுதான்.
News January 17, 2026
இன்று IND vs BAN.. வெல்லுமா இந்திய இளம் படை?

U19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 2-வது போட்டி இன்று நடைபெற உள்ளது. ஜிம்பாப்வேயில் மதியம் 1 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவுடன் நடந்த முதல் போட்டியில் வெற்றி வாகை சூடிய நிலையில், இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றியை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 5 முறை உலக சாம்பியனான இந்தியா, 6-வது வெற்றியை தொடர முனைப்பு காட்டி வருகிறது.


