News October 24, 2025
மனிதனிடம் இந்த திறமைகள் அழிஞ்சிட்டு வருது!

தற்போது, டெக்னாலஜி இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான். சிறு வேலையாக இருந்தாலும், ஒருவருக்கு டெக்னாலஜியின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், இப்படியான உதவியால், மனிதனிடம் இருந்த பல திறமைகள் மெல்ல அழிந்து வருகின்றன. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இன்னும் என்ன திறமையை எல்லாம் நாம் இழப்போம் என கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News October 24, 2025
விவசாயிகள் கண்ணீர்… திமுக அரசே பொறுப்பு: அன்புமணி

விவசாயிகள் கதறி அழுது முறையிட்டபோதும், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் கண்ணீரை துடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளை கடனாளிகளாக மாற்றாமல், கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
News October 24, 2025
புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன் தெரியுமா?

புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியவர் பிரிட்டன் வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக். ஒரே நேரத்தில் பல்வேறு பகுதியில் புயல்கள் உருவாகலாம். குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே புயல்களுக்கு பெயரிடப்படுகிறது. புயலின் பெயரில் அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது. புயலின் பெயர் 8 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.
News October 24, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. காலையில் ₹320 அதிகரித்த நிலையில், மாலையில் ₹1,120 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், 1 சவரன் ₹91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


