News September 10, 2025
இவங்களும் செல்லாத ஓட்டு போடுறாங்களாம்..!

படிக்காத பாமர மக்கள்தான் விவரம் தெரியாம செல்லாத ஓட்டு போடுறாங்கன்னு பார்த்தா, துணை ஜனாதிபதி எலெக்ஷன் வரை இந்த பிரச்னை இருக்கும் போலயே. இன்னைக்கு நடந்த எலெக்ஷன்ல, 767 பேர் மொத்தமா ஓட்டு போட்ருக்காங்க. அதுல சிபி ராதாகிருஷ்ணன் 452 ஓட்டு வாங்கிருக்காரு. சுதர்சன் ரெட்டி 300 ஓட்டு வாங்கிருக்காரு. மீதி இருக்கிற 15 செல்லாத ஓட்டாம். மாதிரி எலெக்ஷன்லாம் நடத்துறாங்க. அப்பவும் இப்படி நடந்தா எப்படி?
Similar News
News March 7, 2026
சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: தமிழிசை

சங்கீதா மட்டுமல்ல, அந்த இடத்தில் எந்தப் பெண் இருந்தாலும் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழிசை கூறியுள்ளார். இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் தலையிட தான் விரும்பவில்லை என்ற அவர், சங்கீதா கூறுவதை போல விஜய்யால் அவர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் அது தவறு எனவும் பேசியுள்ளார். மேலும், இதுபோல பெண்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதே தன்னுடைய கவலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை கல்லூரி <<19320282>>மாணவி பாலியல்<<>> வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட மாணவிக்கு ₹7 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பருக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
News March 7, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், எப்போது உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், மகளிருக்கான திட்டங்களை குறிப்பிட்டு CM மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகையாக ₹2,000 வழங்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.


