News January 31, 2025
வாழ்க்கையையே மாற்றும்.. இந்த பழக்கங்கள் இருக்கா!

ஒவ்வொரு நாளும் நாம் வளர்த்து கொள்ளும் சிறு பழக்கங்கள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்டவை *வாழ்வில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள் * பொறாமைப்படுவதால் ஒன்றும் சாதித்து விட முடியாது *செய்யும் வேலையில் கவனம் இருந்தால் மட்டும் போதும், எதிர்காலம் குறித்து இப்போதே கவலை வேண்டாம் *சோம்பேறிக்கு சோம்பல் முறிப்பதும் கஷ்டமே *Over Confidence வேண்டாம் Bro..
Similar News
News March 6, 2026
இந்தியாவில் அதிகரிக்கும் வேலையின்மை!

இந்தியாவில் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை 3.2% ஆக இருக்கையில், பட்டதாரிகளிடையே இது 4 மடங்கு அதிகமாக (13%) உள்ளது. குறைந்த கல்வி தகுதி உள்ளவர்கள் ஏதேனும் சிறிய வேலையில் சேரும்போது, பட்டதாரிகள் அவர்களுக்கான வேலையை கண்டுபிடிப்பதில் சிரமப்படுகின்றனர். இதற்கு வேலைவாய்ப்பு பற்றாக்குறையே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
News March 6, 2026
USA-விடம் அணு ஆயுதத்தை விட அதிபயங்கர ஏவுகணை

உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும் டூம்ஸ்டே ஏவுகணையை USA சோதித்து பார்த்துள்ளது. சில நிமிடங்களிலேயே கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையால், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை சுமந்து செல்ல முடியுமாம். இந்த சோதனை பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட சோதனை என USA கூறினாலும், ஈரான் போருக்கு இடையே இது நடந்துள்ளதால் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன.
News March 6, 2026
500 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா!

பும்ரா சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 500 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரிஸ் புரூக் விக்கெட்டை கைப்பற்றி அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 235 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 18 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.


