News March 11, 2025
இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும் என IMD முன்னறிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும். இதனால், பள்ளி, கல்லூரி செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.
Similar News
News March 11, 2025
திமுகவை நம்ப இது 1960 அல்ல: அண்ணாமலை

திமுகவின் 60 ஆண்டு கால பொய் பித்தலாட்டங்களை தமிழக மக்கள் புரிந்து கொண்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து முதல்வர் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாகவும், திமுகவின் போலி நாடகத்தை நம்ப இது 1960கள் அல்ல எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதை தடுக்க முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார்.
News March 11, 2025
மறுமணம் செய்ய தடையாக இருந்த மகனை கொன்ற தந்தை!

76 வயதில் மறுமணம் செய்யத் தடையாக இருந்த மகனை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்த ராம் போரிச்சா, தனிமை காரணமாக மறுமணம் செய்ய நினைத்துள்ளார். ஆனால், அவரது மகன் ஜெய்தீப் (52), “திருமண வயதில் பேரன் இருக்கும்போது உனக்கு எதற்குக் கல்யாணம்” எனக் கேட்டதால் ஆத்திரமடைந்த போரிச்சா இந்த செயலை செய்துள்ளார். இதில் யாரை குற்றம் சொல்வது?
News March 11, 2025
கயாடு காட்டில் மழை… குவியும் புதுப்பட வாய்ப்புகள்!

டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் கயாடு லோஹர். படத்தின் கதாநாயகியான அவரது துள்ளலான நடிப்பை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், புதிய பட வாய்ப்புகள் கயாடுவின் கதவைத் தட்ட தொடங்கியுள்ளன. இதயம் முரளி படத்தில் நடித்துவரும் அவர், நிலா வரும் வேளை, ஃபங்கி, தாரம் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதுதான் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதோ!