News December 31, 2024
நாளை முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது

மோசடி உள்ளிட்டவற்றை தடுக்க வங்கிக் கணக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி புதுப்புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாளை (ஜன.1) முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள், 12 மாதத்திற்கு மேல் பயன்படுத்தப்படாத கணக்குகள், குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது.
Similar News
News October 15, 2025
எல்லாருக்கும் BP-யா? சபாநாயகர் அப்பாவு கிண்டல்!

சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக MLA-க்களை பார்த்து, அனைவருக்கும் ஒன்றாக BP அதிகமாகி விட்டதோ என்று நினைத்து விட்டதாக சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார். சிறையில் சிறைவாசிகள் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் உள்ளதாக அமைச்சர் ரகுபதியும் கூறிய நிலையில், சபாநாயகர் மற்றும் அமைச்சரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
News October 15, 2025
சட்டப்பேரவையில் நுழைந்த தவெக

2026-ல் மாற்றம் வரும், நாம் ஆட்சி செய்யப் போகிறோம் என கூறிவந்த தவெக, தேர்தலில் போட்டியிடாமலேயே பேரவைக்குள் நுழைந்துவிட்டது. ஆனால், மக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்புவதற்காக அல்ல. மாறாக, 41 பேரின் குடும்பங்களின் ஆறாத வடுவில் ஏற்பட்ட துயருக்காக. எல்லா கட்சிகளும் பல்வேறு இடையூறுகளை தாண்டி தான் வெற்றிப்படியில் ஏறியது வரலாறு. மக்களுக்கு ஏற்பட்ட இந்த கலங்கத்தை தாண்டி, விஜய்யும் அரசியலில் கோலோச்சுவாரா?
News October 15, 2025
சட்டப்பேரவையில் வெடித்த கூட்டணி சர்ச்சை

சட்டப்பேரவையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக இபிஎஸ், ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் அரசு மீது இபிஎஸ் சராமரியாக குற்றஞ்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், கூட்டணிக்கு ஆள் தேடுகிறீர்கள், இதில் அரசியல் செய்ய வேண்டம் என விமர்சித்தார். உடனே இபிஎஸ், கூட்டணிக்காகவா பேசுகிறோம்; மக்கள் உயிரிழந்துள்ளனர்; அதற்காக பேசுகிறோம் என்று பதிலடி கொடுத்தார்.