News December 30, 2024
1ஆம் தேதி முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது

2025ஆம் ஆண்டு ஜன 1 முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது. அவை எந்தெந்த கணக்குகள் என்பதைப் பார்க்கலாம். 1) 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது. 2) 12 மாதத்திற்கு மேல் பயனில் இல்லாத கணக்குகள் செயல்படாது 3) குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகளும் செயல்படாது. SHARE IT.
Similar News
News July 11, 2025
குஜராத் பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆனது

குஜராத் மாநிலத்தில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
News July 11, 2025
ஜூலை 11…வரலாற்றில் இன்று!

1710 – முதல் இந்திய விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள். * 1966 – திரைப்பட இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். *1982 – இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றது. *1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியாவில் விபத்துக்குள்ளானதில் 261 பேர் உயிரிழந்தனர். *2006 – மும்பை ரயில் குண்டுவெடிப்புகளால் 209 பேர் உயிரிழந்தனர்.
News July 11, 2025
தலையில் அதிக எண்ணெய் வைத்தாலும் ஆபத்து..!

தினமும் தலைமுடியில் அதிக எண்ணெய் தேய்த்தால் அது முடியின்கால்களை அடைத்துவிடுமாம். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதைப்போன்று அதிக எண்ணெய் இருக்கும்போது தூசியும், அழுக்கும் தலையில் சேருவதால் அரிப்பு, பொடுகு அதிகரிக்குமாம். ஆகையால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தலை முழுவதும் படும்படி நன்றாக மசாஜ் செய்து, எண்ணெய் பிசுக்கு போகும் படி கழுவினாலே போதுமானதாம்.