News October 20, 2025
சிறுநீரகம் செயலிழப்பு அறிகுறிகள் இதுதான்

சிறுநீரக நோய்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, சிறுநீரக நோய்கள் “அமைதியான கொலையாளிகள்” என்று அழைக்கப்படுகின்றன. சிறுநீரகம் செயலிழந்தால் சருமத்தில் வறட்சி, தொடர்ச்சியான அரிப்பு, சிவப்பு தடிப்புகள் அல்லது தோலின் நிறத்தில் படிப்படியாக மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. அப்படி இருந்தால் உடனடியாக டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது.
Similar News
News October 20, 2025
மீண்டும் இந்தியாவை மிரட்டும் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை எனில் இந்தியா மீது மேலும் வரிகளை விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். முன்னதாக, ரஷ்ய எண்ணெய்யை வாங்கமாட்டேன் என PM மோடி சொன்னதாக டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு, நாட்டு மக்களின் நலனே முக்கியம் என கூறி, மறுப்பு தெரிவித்து அவரது மூக்கை உடைத்தது இந்தியா. இதனால் கடுப்பான டிரம்ப் தற்போது இந்தியாவை மீண்டும் சீண்டி பார்த்துள்ளார்.
News October 20, 2025
தீபாவளியில் கர்ப்பிணி பெண்கள் கவனமா இருங்க

தீபாவளியன்று கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர் *கர்ப்பிணி பெண்கள் வீட்டில் இருந்தால், அதிக சத்தம் & புகையை உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். இவை சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும் *கர்ப்பிணிகள் பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் குறைந்த சத்தம் & புகையை உருவாக்கும் பட்டாசுகளை முகமூடி அணிந்து எரிப்பது நல்லது *விளக்கு ஏற்றும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.
News October 20, 2025
தீபாவளிக்கு ஜனாதிபதி வைத்த கோரிக்கை

தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறியாமையின் மீது அறிவின் வெற்றியை இந்த பண்டிகை குறிப்பதாக கூறிய அவர், மக்களிடையே அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும், இப்பண்டிகையை பொறுப்பாகவும், சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்காமலும் கொண்டாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.